தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடைபெற்று வருகிறது.குறிப்பாக பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அதிகளவில் இது போன்ற தொந்தரவு கடந்த சில மாதங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வந்தாலும், பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்கள் குறையவில்லை. மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தமிழ்நாடு பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் திருச்சி வண்ணாரப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் சி.இ. மேல்நிலை பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் (தாளாளர்), தலைமையாசிரியருமான ஜேம்ஸ் பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொடுத்துள்ளார். மாணவியின் புகாரின் அடிப்படையில் ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவி ஸ்டெல்லா மேரி ஆகியோரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் அடைப்படையில் கைது செய்தனர்.
திருச்சி புத்தூர், பாரதி சாலையில் ஜேம்ஸ் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சி.இ.மேல்நிலை பள்ளியில் ஜேம்ஸ் (பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியராகவும்) மற்றும் அவரது மனைவி ஸ்டெல்லா மேரி ஆசிரியர், விடுதி வாடனாகவும், ஆகியோர் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் அப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 8 முதல் ஜேம்ஸ், தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அந்த மாணவி என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் விடுதியில் இருக்கும் சக நண்பர்களிடம் தகவலை தெரிவித்து இருக்கிறார். இந்த தகவல் விடுதியின் காப்பாளரும் ஜேம்ஸின் மனைவி ஸ்டெல்லா மேரியிடம் சக மாணவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து விடுதிக்கு வந்த ஸ்டெல்லா மேரி சம்பந்தபட்ட மானவியை அழைத்து விசாரனை நடத்தினார். அப்போது தலைமையாசிரியர் ஜேம்ஸ் அவர்கள் என்னிடம் தவறாக நடந்துக்கொள்வதாக மாணவி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விடுதி (காப்பாளர்), ஆசிரியர் ஸ்டெல்லா மேரி அந்த மாணவியை அழைத்து நீ தேவையற்ற தகவல்களை பொய்யாக பரப்புகிறார் என்றும் மேலும் இது போன்று யாரிடமாவது கூறினால் நீ இந்த பள்ளியில் படிக்க முடியாது என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதே பள்ளியில் பாதிக்கபட்ட மாணவியின் தங்கை 6 வகுப்பு, தம்பி 2 வகுப்பு படித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு பாதிக்கபட்ட மாணவி, அவருடைய தங்கை,தம்பி ஆகிய மூவரும் இனிமேல் இந்த பள்ளிக்கு வரகூடாது என மிரட்டி அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவித்தனர். மேலும் மாணவி அங்கு இருந்து அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்க்கு சென்று உள்ளனர். சில நாட்கள் கடந்ததும் நீங்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என உறவினர்கள் கேட்டனர். அப்போது பாதிக்கபட்ட மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதுக்கொண்டே பள்ளியின் தலைமையாசிரியர் ஜேம்ஸ் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக தெரிவித்தார். உடனே உறவினர்கள் மாணவியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர், மேலும் இந்த வழக்கு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றபட்டது. மேலும் மாணவியிடம் காவல்துறையினர் விசாரனையை மேற்க்கொண்டனர் அப்போது மாணவி வாய்மொழியாக நடந்த அனைத்தையும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜேம்ஸ் போச்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டார். பின்பு விசாரனையை காவல்துறையினர் தீவிரபடுத்திய போது இந்த குற்றத்திற்கு ஜேம்ஸின் மனைவி ஸ்டெல்லா மேரியும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போச்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தன்ர்.