திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சிக்கு ஈரோட்டில் இருந்து வரும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிச்சு இருக்காங்க. அதனால ரயில் பயணிகளே இதை மறந்து விடாதீர்கள்.

Continues below advertisement

பாசூர் ரெயில் நிலையத்துக்கும், ஊஞ்சலூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே ரெயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க. 

அதன்படி ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் கரூரில் இருந்து திருச்சி வரையும், திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் திருச்சியில் இருந்து கரூர் வரையும் மேற்கண்ட 2 நாட்கள் மட்டும் இயக்கப்படும் 

Continues below advertisement

அதுமட்டுமல்ல ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரெயில் மேற்கண்ட 2 நாட்களும் ஈரோட்டில் இருந்து இயக்கப்படாமல் கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை நோக்கி செல்லும். இதேபோல் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் இந்த 2 நாட்கள் மட்டும் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால இதை உங்க டைரியில் குறிச்சு வைச்சுக்கோங்க.