ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து கபட நாடகம் ஆடிய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மரியல் போராட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் தலைமையில் கடந்த நேற்று முன்தினம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும்  ரயில் மறியல் போன்றவை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக சுமார் 200-க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக கூடியிருந்த நிலையில் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டனம் முழக்கமிட்டனர். பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முன்வந்த போது காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Continues below advertisement

மேலும் ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்த வருபவர்கள் எல்லை தாண்டி வரக்கூடாது என்பதற்காக போடப்பட்டிருந்த ரோப்கயிரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை தள்ளி அழுத்தினார்.  இதில் சுதாரித்துக் கொண்ட அவர் பின்னால் நின்ற உறுப்பினர்களை வேமமாக தள்ளி விட்டார். பின்னர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன் ,அவருக்கான அலுவலகத்தை பறித்து  அவரை, பாரதிய ஜனதா கட்சி நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்துள்ளது. ஆனால் சட்ட ரீதியாக நீதிமன்றம் வாயிலாகவும், மக்கள் மன்றம் வாயிலாக நாங்கள் இதனை வெல்வோம் என்றார்.  சர்வாதிகாரப் போக்கினை கையில் எடுத்துக்கொண்டு பாஜக தொடர்ந்து ராகுல் காந்திக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதற்கெல்லாம் ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருபோதும் பயப்பட போவதில்லை என முழக்கம்யிட்டனர். 

Continues below advertisement

இதனை தொடர்ந்து தடையை மீறி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்ற திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உள்பட 244 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.