தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். 




இதேபோன்று தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் நெல் விலைச்சலுக்கு சரியான விலையை அரசு நிர்ணைக்கவேண்டும். நெல் கொள்முதல் நிலைகள சரியாக பராமரிக்க வேண்டும். மழை காலங்களில் நெல் மணிகள் அனைத்தும் வீணாக போகிறது. ஆகையால் நெல்லுக்கு உரிய விலையை நிர்ணைக்கவேண்டும். என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.




இதேபோல் அய்யாகண்ணு தலைமையில் அரை நிர்வானமாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அய்யாகண்ணு, “தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கட்டாயமாக இடம் பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிறிதும் எண்ணி பார்க்காமல் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு விவசாயிகளின் குடும்பங்களை எண்ணி பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் அனைவரும்  நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டார். அதற்க்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை, ஆகையால் சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். பின்பு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் வந்து விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுவை பெற்று கொண்டார். மேலும் உங்களை கோரிக்கையை அரசிடம் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.