கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் சாதனா. 'டிக்டாக்' பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் பக்கத்தில் குளிக்கும் வீடியோ மற்றும் ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார். அதிலும், சாதனா ஆபாசமாக பேசியபடி, வெளியிட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளவாசிகளை அதிர வைத்தது. டிக்டாகில் ரவுடி பேபி சூர்யா, திவ்யாவுக்கு அடுத்தபடியாக சமூகவலைய தளங்களில் பிரபலமானவர் திருச்சி சாதனா. சாதாரண கிராமத்து பெண்ணிடம்  இவ்வளவு திறைமையா, என மக்களை அசரவைத்தவர் தான் சாதனா. காலபோக்கில் டிக்டாக் முடக்கபட்டதால் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல விதமான வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.


இதனை தொடர்ந்து பல வீட்டியோக்கள் சமூக வலையதளங்களில் வைரலாக மாறியது. அதேசமயம் சாதனாவின் சில வீடியோக்கள் எல்லைமீறியதாக இருந்தது. குறிப்பாக குளியல் வீடியோ, நடனம், ஆபாசமாக பேசுவது, என விதவிதமாக வீடியோக்களை எடுத்து வெளியீட்டார். அதிலும் காட்டுவாசிபோல் நடனம் ஆடியது பேசும்பொருளாக மாறியது. மேலும் பொதுமக்கள் அதிலும் பெண்கள் முகசுழிக்கும் விதமான ஆபாசமான வீடியோவை கடந்த சில நாடகளாக பகிர்ந்து வருகிறார்.




மேலும்  பலதரப்பில் இருந்து மக்கள், காவல்நிலையத்தில் சாதான மீது புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நச்சலூர் கிராம மக்கள், கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து, சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார்  விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து சமூக வலையதளங்களில் தனிபட்ட கருத்துக்களை பகிர்வது, வீடியோ செய்வது என்பது ஒரு பொழுதுபோக்கு தான், ஆனால் மற்றவர்களை முகம்சுழிக்கும் வகையில் ஆபாசமாக வெளியீடுவது சட்டபடி குற்றம். மேலும் உங்கள் மீது இதுபோன்ற புகார்கள் வந்தால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என  தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். 




இதனை தொடர்ந்து நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். இவரைப் போலவே ஆபாசமாக பேசி, ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த 'டிக்டாக்' பிரபலம் ரவுடி பேபி சூர்யா, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த பயத்தில் தான் சாதனா இப்படி அந்தர் பல்டி அடித்துள்ளார் என்று வலைத்தளவாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இதுபோல வீடியோ போட்டு வந்தால் ரவுடி பேபிக்கு நடந்துதான் உங்களுக்கும் நடக்கும் என போலீசார் எச்சரித்ததால்  இனி ஆபாச வீடியோ போட மாட்டேன் என்று திருச்சி சாதனா அலறியுள்ளார்.