திருச்சி: திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூலை மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.

Continues below advertisement

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் என்பது மின்சார நுகர்வோர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கூட்டமாகும். இந்த கூட்டத்தில், மின்சார வாரிய அதிகாரிகள் நுகர்வோர்களின் குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சிகள் எடுப்பார்கள்.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களில் பொதுவாக, மின் கட்டணங்கள், மின் இணைப்பு, மின்சாரம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், மின்சாரம் தடைபடுதல் போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்படும். இந்த கூட்டங்களில், மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். 

Continues below advertisement

அந்த வகையில் திருச்சி  திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூலை 2025ம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் நாட்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

(1) துறையூர் கோட்டம்- 01.07.2025 (முதல் செவ்வாய்கிழமை.

(2) முசிறி கோட்டம்-04.07.2025 (முதல் வெள்ளிக்கிழமை.

(3) இலால்குடி கோட்டம்-08.07.2025 இரண்டாம் செவ்வாய்கிழமை. )

(4) திருவரங்கம் கோட்டம்-11.07.2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை. )

(5) திருச்சி நகரிய கோட்டம்-15.07.2025 (மூன்றாம் செவ்வாய்கிழமை. )

(6) திருச்சி கிழக்குகோட்டம்-18.07.2025 ( மூன்றாம் வெள்ளிக்கிழமை. )

(7) கோட்டம்-22.07.2025 (நான்காம் செவ்வாய்கிழமை. )

எனவே வரும் ஜூலை 2025ம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் செல்வி  தெரிவித்துள்ளார்.