Trichy Power Shutdown: திருச்சி மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை (07.08.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. எனவே மக்களே உங்களின் மின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். குடிநீர் சேகரிப்பு, சமையலுக்கு தேவையானவற்றை அரைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாளை 7ம் தேதி வியாழக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதன்படி கொப்பம்பட்டி, முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் இந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி கொப்பம்பட்டி, முத்தையம்பாளையம், கொப்பமாபுரி, ராஜபாளையம், வலையபட்டி, கோட்டப்பாளையம், சோபனபுரம், காஞ்சேரிமலை, புதூர், ஒடுவம்பட்டி ஓசரப்பள்ளி, டி.மங்கப்பட்டி, புதூர், டி.முருங்கபட்டி, பாதர் பேட்டை, வெள்ளாளப்பட்டி, பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவன்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, புதூர் பெரியசித்தூர், பெரும்பரப்பு, புதூர் சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், டாப்செங்காட்டுப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், காந்திபுரம், புடலாத்தி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மேலும் வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை சூக்கலாம்பட்டி, ஏரிக்காடு, பி.மேட்டூர், கோட்டப்பாளையம், விசுவாம்பாள் சமுத்திரம் தெற்கு வடக்கு, உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
இதேபோல் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கல்லக்குடி, பழனியாண்டிநகர், காமராஜபுரம், வரக்குப்பை, அளுந்தலைப்பூர், சிறுகளப்பூர், கருடமங்கலம், தாப்பய், வந்தலைகூடலூர், பெருவளப்பூர், விடுதலைப்புரம், சிறுவயலூர், கே.கே.நல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்னரே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.