Trichy Power Cut (25.10.25): திருச்சி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 25 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.

Continues below advertisement

திருச்சி மாவட்டத்தில் இன்று  (அக்டோபர் 25) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். 

இன்று எங்கெல்லாம் மின் தடை?

சமயபுரம்:

Continues below advertisement

தென்னூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்

முன்னெச்சரிக்கை:

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.