Trichy Power Shutdown: திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 20-11-2025 அன்று மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. திருச்சி மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். . இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

Continues below advertisement

நாளை எங்கெல்லாம் மின்  தடை:

திருவானைக்கோவில்

மாம்பழச்சாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் நகர், வெள்ளிக்கிழ்மை சாலை, கீழஉள்வீதி, திமிராய சமுத்திரம், சென்னை பைபாஸ் ரோடு, திருவளர் சோலை, கீழ வாசல்.

சமயபுரம்

தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்.

கே.சாத்தனூர்

குட்டி அம்பளக்காரன்பட்டி, தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்தா நகர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் நகர், ஓலையூர், பாரி நகர், ராஜ மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், சாத்தனூர், தங்கையா நகர் பிரிவு.

வரகனேரி

தஞ்சை சாலை, மகாலட்சுமி நகர், வடக்கு தாரணநல்லூர், மரியம் தெரு, வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை நகர்  1-6 கிராஸ், இருதயபுரம், வராகனேரி, குலுமிகரை, நாடு தெரு, அக்ரஹாரம், தோப்பு தெரு, 

தென்னூர்

அண்ணாமலைபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை நகர், சாஸ்திரி சாலை, அண்ணாமலை நகர், அண்ணா நகர், மதுரை சாலை, சப் ஜெயில் சாலை, நாடு குஜிலி தெரு, பிக்பஜார், சந்துக்கடை, டைமண்ட் பஜார், அலிமல் தெரு, கிழத்தார் தெரு, பக்காலி தெரு, புது ரெட்டி தெரு

மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் 

* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.

* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.

* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.

* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.

* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.