திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமணி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வாரம் தோறும் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். மேலும் மாநகர் பகுதிகளில் திருட்டு,கொலை, கொள்ளை சம்பவங்களை முற்றிலும் தடுத்திட 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாநகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளார். 


குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குக்கா, கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல் கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைளை எடுத்து வருகிறார். 




கடந்த சில மாதங்களாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை உடனடியாக தடுத்திட தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.




மேலும் காணாமல் போன செல்போன்கள் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில், கண்டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 69 செல்போன்களும், காந்திமார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 21 செல்போன்களும், கே.கே.நகர் சரக காவல்நிலைய எல்லையில் 11 செல்போன்களும், பொன்மலை சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 10 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் உட்பட 25 லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளின் 153 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்க்கபட்டுள்ளது.


மேற்படி மீட்கப்பட்ட 153 செல்போன்களில் 127 செல்போன்களை ,அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமிணி அவர்கள் ஒப்படைத்தார்கள்.


மேற்படி செல்போன்களை திரும்ப பெற்றுக்கொண்ட அதன்உரிமையாளர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போனைகண்டுபிடித்து தந்ததற்கு மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும், மாநகர காவல்துறைக்கும் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். மேலும் திருச்சி மாணவரில் குற்றச்சம்பழங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், விரைவில் முழுமையாக குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படும் என தெரிவித்தார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.