திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டால் வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் திருச்சியின் மிக முக்கியமான மற்றொரு அடையாளமாக பஞ்சப்பூர் மாறி வருகிறது. 


திருச்சி தமிழகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக மாறி வருகிறது. தொழில் நிறுவனங்கள் நிரம்பிய இப்பகுதி பட்டைத் தீட்டப்பட்ட வைரமாக மாறி வருகிறது. இந்நிலையில் திருச்சியில் டைடல் பார்க்கை அமைக்க முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஐடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு தொழில்நுட்ப மேம்பாட்டு கழகம் மற்றும் மின்னணு கழகம் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி தற்போது செயல்பட்டு வருகிறது. சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் மிகப்பெரிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.



Trichy Tidel Park: வேற லெவல் ஆகப்போகும் திருச்சி... 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை.. ரெடியா இருங்க..!


இது மட்டுமல்லாமல் முதல் கட்ட நகரங்களை காட்டிலும் இரண்டாம் கட்ட நகரங்களில் மினி டைடல் பார்க் என்ற பெயரில் சமீபத்தில் தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் போன்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டது. ஆனால் மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் முழுக்க முழுக்க மிகப் பிரம்மாண்டமான டைடல் பூங்காக்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இவ்வாறு இருக்க திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 14.16 ஏக்கரில் 403 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து அரசு சார்பில் உத்தரவிட்டது. இதே பஞ்சப்பூரில் தான் பேருந்து நிலைய முனையம் அமைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த டைடல் பார்க் எப்போது தொடங்கும் என்று திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூரில் ரூ. 403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடனும் கூடிய டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் அமைந்து வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை  டைட்டில் பார்க் சென்னை நிறுவனம் அமைக்க உள்ளது. இந்த பூங்காவானது 14.17 இயக்க நிலப்பரப்பில் 6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் இதனை கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கூறும் பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.


பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூரில் வருவதால் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த டைடல் பார்க் வருவதன் மூலம் திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் பெரிய ஜாக்பாட் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பல்வேறு நிறுவனங்கள் இதன் மூலம் திருச்சியில் அடி எடுத்து வைக்க உள்ளன. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை முற்றிலும் மாறும். 


இதனால் திருச்சி மாவட்டம் மிகவும் வளர்ச்சி அடையும். டைடல் பார்க் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது என்பதால் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். குறிப்பாக சாப்ட்வேர் துறையை சேர்ந்த வாலிபர்கள் என்றால் மிகையில்லை.