திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களை கண்காணிக்கவும், சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். அதன்படி, கடந்த (17.06.2023)-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 14 வயது அரசு பள்ளி மாணவியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 38 வயது மதிக்கதக்க நபர் சிறுமியின் வீட்டிற்கு வந்தும், தன்னுடைய வீட்டிலும் கட்டாயப்படுத்தி அச்சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின்படி விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் நடுக்கொண்டயம்பேட்டையை சேர்ந்த  தனபிரியன் (எ) பாலு  என்பவர் இக்குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே அவர்மீது  ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தும்,  கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




மேலும் தனபிரியன் (எ) பாலு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட  குற்ற என நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா அவர்கள் மேற்படி தனபிரியன் (எ) பாலு மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள தனபிரியன் (எ) பாலு அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண