இம்மாதம்  12ஆம்  தேதி தீபாவளி பண்டிகையை  தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதை உரிது செய்யும் வகையில், தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். பின்வருமாறு... 


1) கடையில் பட்டாசு விற்பனை நேரங்களில் கண்டிப்பாக உரிமம் வைத்திருக்க வேண்டும். கடையின் முன்பு புகைபிடிக்கக்கூடாது. மேலும், நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள கால அளவினை குறிப்பிட்டு அந்த நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும்.  பொதுமக்கள் அறியும் வகையில் கடைக்கு முன்பு அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும்.


2) கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது, மேலும் சாலை ஒரங்களில் இருக்கும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது.


3) பட்டாசு வைப்பறையின் அளவு குறைந்த பட்சம் 9 ச.மீட்டர் ஆகவும், அதிக பட்சம் 25 ச.மீட்டர் அளவு கொண்டதாக இருக்க வேண்டும்.


4) கடையில் மின்சாரம் தடைபடும் போது அவசர கால மின்விளக்கு (Emergency Light) செயல்படும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


5) அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவைவிட கூடுதலாக சேமிப்பு வைத்திருக்க கூடாது.


6) தற்காலிக பட்டாசு விற்பனை வெடிப்பொருள் சட்ட விதிகளில் கடை கூறப்பட்டுள்ள விதிகளின்படி பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.




7) உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 90 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது. வெளிநாடுகளில் இருந்து அதாவது சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட வெடி பொருள்களையும் விற்பனை செய்யக்கூடாது. 


8) குறைந்த பட்சம் 4+4 தண்ணீர் வாளி, மணல் வாளிகள் மற்றும் அருகில் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டி மணல் மணல் மூட்டைகள் மற்றும் தீ அணைப்பான்கள் எந்த நேரமும் பயன்படுத்ததக்க வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


9) தரமான மின் ஒயர் இணைப்புகள், மின்சார சாதனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்விளக்குகள் தொங்க கூடியதாக இருக்கக்கூடாது. சுவற்றில் பதிந்து இருக்க வேண்டும். மெயின்மின் இணைப்பு பிபூஸ் சர்க்யூட் பிரேக்கர் வெளிப்புறம் அமைக்கப்ப வேண்டும்.


 10) கடையினை படிக்கட்டுகள், மின்தூக்கிகள் ஆகியவற்றின் கீழ்ப்பகுதியிலோ அருகாமையிலோ அமைக்கக்கூடாது தரைத்தளம் தவிர மாடிகளிலும் நிலவறைகளிலும் பட்டாககளை சேமிக்கக்கூடாது. 


11) பட்டாசு விற்பனை துவங்கிய பின் அக்கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.


12) குடியிருப்பு பகுதிகளை மேல் தளங்களில் அமையப்பெற்று நிலையில் பட்டாசு கடை வைத்து விற்பனை செய்யக்கூடாது. கட்டிட உரிமையாளிடமிருந்து ஆட்சேபனை ஏதும் பெறப்பட்டால் தற்காலிக உரிமம் உடனடியாக ரத்து
செய்யப்படும். 


13) கடையின் பக்கத்தில் விளம்பரத்திற்காக பட்டாசுகளை தெரியும்படி வைக்கக கூடாது. கடைகளின் அருகே பட்டாசு கொளுத்த அனுமதிக்க கூடாது.




14) கைத்துப்பாக்கி பட்டாசு வெடித்து காண்பிக்கக்கூடாது.


15) எதிர் எதிரே பட்டாசு கடைகள் நடத்தக்கூடாது,  ஒவ்வொரு பட்டாசு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.


16) ஈர சாக்குகள் எந்த நேரமும் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.


17) தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.


18) பட்டாசு பண்டல்களை மொத்தமாக ஏற்றி இறக்கும்போது உராய்வு ஏற்படுத்தாதவாறு கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகிறது.


19) மேற்படி நிபந்தனைகள் மற்றும் வெடிபொருள் சட்ட விதிகளை உரிமதாரர்கள் மீறும் பட்சத்தில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாசு உரிமம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். 


மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி
உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். காவல்துறை மற்றும் பிற துறைகளிடம் முறையான அனுமதி பெறாமல் பட்டாசு கடைகளை  நடத்தினால் சட்டரீதியான கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.