சமூக விழிப்புணர்வு என்பதை சமூகநல விழிப்புணர்வு என்றும் கூறலாம். சமூகம் என்பது யாரோ வெளியாட்கள் கிடையாது . நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் தான் ஒருவருடைய சமூகம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், குடும்பம் இவர்கள் தான் பெரும்பாலும் ஒருவருடைய சமூகம் ஆகிறார்கள் . இதுபோக நாம் யாரோடு கலந்துரையாடல், தொடர்பு கொள்கிறோமோ அவர்களின் பின்புலம் நம் சமூகம் ஆகிறது. இன்றைய நிலையில் இந்த சமூக விழிப்புணர்வு என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமான திறனாகிறது. ஆனால் மிகவும் குறைவான மக்களிடம் தான் இருக்கிறது. ஒரு சமுதாயத்தில் நம்மை சரியான இடத்தில் பொருத்திக் கொள்ளவும், திறம்பட செயலாற்றவும், மகிழ்ச்சியாக வாழவும் சமூகவிழிப்புணர்வு அவசியம் ஆகும். 


சமூக விழிப்புணர்வு 4 முக்கிய பகுதிகளைக் கொண்டது: சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை, சமுதாய விழிப்புணர்வு, உறவு மேலாண்மை வகைபடும். இன்றைய கால பொது மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு “சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்” நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில், காந்திமார்க்கெட் சரகம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் S.J திருமண மண்டபத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் "சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்" (Awareness Programme on Social HARMONY) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்ந நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு, சமூக நலத்துறை & குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், காவல் உதவி ஆணையர், காந்திமார்க்கெட் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டார்கள்.


இக்கூட்டத்தில் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது எனவும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க கூடாது. அரசியல் அமைப்பின் அடிப்படைக் கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் இருப்பது பொதுமக்களாகிய நமது கடமையாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.


மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகம் (SC/ST) முன்னேற்றத்திற்காக அரசால் பல்வேறு நல திட்டங்களின் மூலம் என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பன குறித்து விரிவாக எடுத்துரைத்ததார்கள். இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழிப்புணர்பு கூட்டத்தில் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.