திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களின் பணிபுரியும் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 


பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். குற்றங்கள் எதுவும் நடக்காமல் நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். குறிப்பாக பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள்,  பெண்கள் ஆகியோர்களை குறி வைத்து சிலர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 


ஆகையால் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்கள் மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்.  அதே சமயம் சந்தேகப்படும்படி அப்பகுதிகளில் சுற்றித் திரியும் நபர்களை உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.




பாலியல் குற்றங்கள் குறித்து மக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்


மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் அடிப்படையில் பாலியல் புகார்கள் வராத வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பாலியல் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுனையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 


மேலும் பாலியல் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் பொதுமக்கள் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பெத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகள் கவிதா இவர்  (மனநிலை பாதிக்கப்பட்டவர்) . இவரை  கடந்த 2019 ஆண்டு  தனது வீட்டில் தனியாக இருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த திருமலை மகன் விஜயன் என்பவர் காவிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கவிதாவிடம் கட்டாய பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.




பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை 


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கவிதாவின் சகோதரி சந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை போலீசார் மேற்க்கொண்டனர். பின்பு  புகார் உண்மை என தெரிந்ததும் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


திருச்சி மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற விசாரணை இறுதியில்  விஜயன் என்பவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.


மேலும், குற்றவாளி விஜயனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாத காலம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.