மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி மேற்படி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக வருவதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (Selfie) எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

எனவே, காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ, அல்லது தகவல் ஏதும் அளிக்க நினைத்தாலோ கீழ் காணும் காவல்துறை உதவி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாநகர காவல் ஆணையர் காமினி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மாநகர காவல்துறை உதவி எண் :

அவசர உதவி எண் : நுண்ணறிபிரிவு அலுவக எண். 0431 2331929 / 94981 00615, நுண்ணறிபிரிவு வாட்ஸ்அப் எண்: 96262 73399, கட்டுப்பாட்டு அறை அலுவக எண். 0431-2418070, கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண்: 93840 39205 - என்ற எண்ணிற்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்தானது அதிகரித்துள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள தாழ்வான கிராம பகுதிகளான மல்லாச்சிபுரம், கம்பரசம்பேட்டை, முருங்கபேட்டை, குணசீலம், கரியமாணிக்கம். சிறுகாம்பூர், திருவாசி, அல்லூர், சர்க்கார்பாளையம், ஒட்டக்குடி, முள்ளிக்குடி, குவளக்குடி, வேங்கூர், முருகுர், வாளவந்தான்கோட்டை, உய்யன்கொண்டான் ஆற்றுபகுதிகள் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதேபோல், கூகூர், அரியூர், சடமங்கலம், இடையாற்று மங்கலம், நம்பர் 1 டோல்கேட், உமையாள்புரம், செவந்திலிங்கபுரம், அய்யம்பாளையம், கோடியாம்பாளையம், திருநாராயணபுரம், மணமேடு. அளகரை, உன்னியூர், சீலைப்பிள்ளையார் புதூர், காடுவெட்டி, எம்.புத்தூர், காரைக்காடு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல்துறை உதவி எண் : 

மேலும், இது தொடர்பாக ஏதேனும் அவசர உதவிக்கு மாவட்ட நிர்வாக அவசர உதவி எண் 4077 என்ற எண்ணிற்கும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அவசர உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கும் எந்தநேரத்திலும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.