திருச்சி மாநகரம், காவல் ஆணையகரகத்தில் டிசம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் திரு.S.செல்வகுமார், (தெற்கு), திரு.V.அன்பு, (வடக்கு), திரு.S.ரவிசந்திரன், (தலைமையிடம்), காவல் கூடுதல் துணை ஆணையர்(ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.


இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் காமினி  அவர்கள் பேசுகையில்,


கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்கள்.


மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள  CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும் எனவும், மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.




பொங்கல் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளை  கைது, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும். மேலும் முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவலக புகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொண்டும், அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும், வழக்கு பதிவு செய்ய முகாத்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.


மேலும் திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை முழுமையாக தடுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  மேலும் போதை பொருள், லாட்டரி சீட் விற்பனை, சாலை பாதுகாப்பு விதிமுறைகள், குறித்து தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.