திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றில் பூட்டை உடைத்து திருட்டு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து, சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.  இந்நிலையில் ஜோசப் என்பவர் சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு, சந்துக்கடை பகுதியில்  கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகை பட்டறை வைத்து, ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த ஒரு மாதமாக சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலை முடித்துவிட்டு, வேதாத்திரி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று விடுவதாகவும், வழக்கம் போல நேற்று முந்தினம் அவரும் அவரது மனைவி ஏஞ்சல் மேரியும் நகை வேலை முடித்து விட்டு இரவு சுமார் 10 மணியளவில் வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை சுமார் 6 மணியளவில், ஜீவா என்பவர் தனக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்ததின் பேரில், மேற்படி ஜோசப் தனது மனைவியுடன் சௌந்தர பாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

 



 

மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ஆர்டரின் பேரில் மூக்கத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், பூ மூக்குத்திகள், கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும் போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் திருடப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மொத்த எடை சுமார் 1 கிலோ கிராம் இருக்கும் என்றும், மொத்த மதிப்பு சுமார் ரூ. 50,00,000/- இருக்கும் என்றும், மேற்படி திருடு போன நகைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டு கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்  கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.




மேலும் தனிப்படையினரின் புலன்விசாரணையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை செய்ததில், திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய சந்தேக நகர் சரித்திர பதிவேடு (Suspect History Sheet) உள்ள ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்தில் 8 வழக்குகளும், காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கிலும் சம்மந்தப்பட்ட  பரணி குமார், மற்றும் அவரது கூட்டாளி சரவணவன் ஆகியோரை காவல்துறையினர் 4 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து , உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது.