திருச்சி: அட்டகாசமான ஒரு முடிவை எடுத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது திருச்சி மாநகராட்சி. இதற்கு நடுநிலையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அப்படி திருச்சி மாநகராட்சி எடுத்த முக்கிய நடவடிக்கை என்ன தெரியுங்களா?

Continues below advertisement

திருச்சி மாநகராட்சி , பொது இடங்களில் சாதி மற்றும் இழிவான பெயர்களை நீக்க ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக, தெருக்களின் பெயரை மாற்றும் திட்டத்தை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, 55 சாலைகள் மற்றும் தெருக்களுக்கு புதிய பெயர்களை பரிந்துரைக்க குடியிருப்பாளர்களிடம் கேட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தின் நோக்கம், சாதி அடையாளத்தை நீக்கிவிட்டு, நடுநிலையான பெயர்களை வைப்பதாகும்.

திருச்சியில் உள்ள 65 வார்டுகளிலும் சுமார் 20 தெருக்கள் சாதி, மத அல்லது இழிவான பெயர்களுடன் உள்ளன. சில தெருக்கள் மது, வடிகால் அல்லது சுடுகாடு போன்ற இடங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உதவி ஆணையர்கள் இது போன்ற தெருக்களின் பட்டியலை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மண்டலம் V-ல் மட்டும் ஒன்பது தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பட்டியல் மாநகராட்சி நிர்வாகப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெற்ற பின், பெயர் மாற்றத்திற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் கூறுகையில், "திருச்சி பல மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது. அதனால், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் பகுதி சபாக்களுடன் கலந்தாலோசித்து, சட்ட சிக்கல்கள் ஏதும் இல்லாமல் பெயர் மாற்றத்தை சுமூகமாக முடிக்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

சாதி சார்ந்த முகவரிகள் விண்ணப்பங்கள் மற்றும் நேர்காணல்களில் குறிப்பிடும்போது சங்கடத்தை ஏற்படுத்துவதாக சில குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெயர் மாற்றும் இந்த முயற்சிக்கு நடுநிலையாளர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பகுதி சபா கூட்டங்களில், கோர தெரு மற்றும் அருகிலுள்ள குறா தெரு பேருந்து நிறுத்தத்திற்கு பெயர் மாற்ற கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு சி.பி.ஐ மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

பெயர் மாற்றும் விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், 'காலனி' என்ற பின்னொட்டுடன் இருக்கும் குடியிருப்பு பகுதிகளின் பெயர்களும் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர். சாதி பெயரை நீக்கிவிட்டு மற்ற பெயரை வைக்க முடியுமா என்று பார்ப்போம். முடியவில்லை என்றால், முழு பெயரையும் மாற்றிவிடுவோம். மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ள தெருக்களின் விவரம்:

பாபு செட்டி தெருபட்டாபிராமன் பிள்ளை தெருவிஸ்வப்பா நாயக்கன் பேட்டை தெருசோடா நாயக்கன் தெருஆபீசர்ஸ் காலனிபழைய அக்ரஹாரம்படையாட்சி தெருநரசிம்ம நாயுடு தெருஅமிர்த ஆசாரி தெருஎடத்தெருமொத்தம் 55 தெருக்கள்/சாலைகள் பெயர் மாற்றத்திற்காக கண்டறியப்பட்டுள்ளன. 

Zone II-ல் 42 தெருக்களும், Zone V-ல் 13 தெருக்களும் உள்ளன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு பெயர் மாற்றம் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் நிரந்தரமாக ஒரு நல்ல தீர்வாக அமையும் என்பதால் அனைத்து தரப்பினரும் இதற்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.