2024 - நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரக் குழு ,தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் என்று அமைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40-40 இடங்களை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பாக தேர்தல் பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். வார்டு, பகுதிவாரியாக பொதுமக்களை சந்தித்து திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். அதேபோன்று அதிமுகவில் கூட்டனியை பலப்படுத்துவது, புதிய நிர்வாகிகளை தங்களது கட்சியில் இணைப்பது. உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதேசமயம் விசிக, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி என்றாலே திருப்புமுனை என்று அரசியல் கட்சி வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக ,மற்ற கட்சிகள் அனைத்தும் திருச்சியை மையப்படுத்தி தங்களது பிரச்சாரத்தையும் தேர்தல் பணிகளையும் தொடங்கி வருகிறார்கள்.
குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கட்சி 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டில் தங்களது கட்சியினை பல படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் - என் மக்கள் என்ற நடைபயணம் மூலம் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மோடி அவர்கள் ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகள் என அனைத்தையும் எடுத்துகாட்டி வாக்கு சேகரித்து வருகிறார். அதேசமயம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மக்களை கண்டுக்கொள்ளாமல் அவர்களு தேவையான பணிகள், ஊழல், என்று தமிழ்நாட்டை சீரழித்து விட்டார் என குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும், தமிழ்நாட்டில் பிரதமர் மோடி அவர்கள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக சார்பாகவும், அரசியல் வட்டாரங்கள் சார்பாகவும் தகவல்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோடி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓபிஎஸ், பாஜகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு 2 முறை தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அவர்கள் வருகை தந்தார். தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மோடி 2 முறையும் திருச்சியை மையப்படுத்தியே பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டுள்ளார். ஆகையால் திருச்சியில் எந்த பணிகளை தொடங்கினாலும் நிச்சயம் அது வெற்றியே அடையும் என்று அரசியல் வட்டார மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு.
குறிப்பாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மோடி ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள், சலுகைகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளராக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதி முழுவதும் பூத் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி மலைக்கோட்டை மண்டல் சறுக்குபாறை பகுதியில் "மீண்டும் மோடி வேண்டும் மோடி" என்னும் சுவர் விளம்பரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி இணை பொறுப்பாளர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்து கொண்டு சுவர் விளம்பரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஒண்டி முத்து, பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எஸ்.வி. வெங்கடேசன் எனும் சுதாகர், மலைக்கோட்டை மண்டல் தலைவர் ஜெயேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர்கள் ராம் திலக் மற்றும் சதீஷ், கிளை தலைவர் மாது, துணைத் தலைவர் பரமேஸ்வரன் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.