இந்திய முழுவதும் நேற்று 77வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சி சிறந்த செயல்பாடுக்கான விருதினை மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் நேற்று தமிழக முதல்வரிடம் பெற்றனர்.  இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் கூறுகையில், “நாட்டின் 77வது சுதந்திர தின விழாவில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறத.  இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது. திருச்சி மாநகராட்சி பொருத்தவரை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற காரணத்தால் திருச்சியை முன்மாதிரி மாநகராட்சியாக உருவாக்குவது அவரின் நீண்ட நாள் கனவாக உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக முதல்வரிடம் பல்வேறு நிதி ஆதாரங்களை பெற்று திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி திருச்சி மாநகராட்சி நான்கு பெண் நேயர்களுக்கு பிறகு ஐந்தாவது மேயராக எனக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுத் தந்தார். அந்த முறையில் அவருக்கு சிறப்பான முறையில் செயல்பட்டு திருச்சியை சிறந்த மாநகராட்சியாக உருவாக்க அல்லும் பகலமாக நானும் மாநகராட்சி ஆணையரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களின் இரண்டு பேரும் முயற்சியும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேருவின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

Continues below advertisement




மேலும் மத்திய அரசின் மூலம் திருச்சி மாநகராட்சி சுற்றுப்புற சூழலில் சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்றிய அரசின் விருதினை பெறுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம். இந்த பரிசினை பெறும்போது நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் ஆகட்டும் என்னுடைய சக நகர்மன்ற உறுப்பினர்களாகட்டும் இந்த பரிசினை பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. அதேபோல் சென்னையில் உள்ளது போல்  27 பேரூராட்சிகள் இணைக்க  தீட்டப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை  இந்தத் திட்டத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.  ஆகவே அடுத்த நிதியாண்டில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழக முதல்வரிடம் இதற்கான ஆணையைப் பெற்று நடைமுறைப்படுத்த உள்ளோம். பேரூராட்சி இணைப்புக்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு அடுத்த ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.




திருச்சி மாநகராட்சியில் அனுமதியின்றி ஒட்டப்படும் போஸ்டர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையரின் கண்காணிப்புபடி அதற்கான வரையறை செய்யப்படும். மேலும் திருச்சி மாநகராட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படும் இடத்தை அகற்றி அதில் வண்ண ஓவியங்கள் வரைந்து போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் 75 இடங்களில் அதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மற்ற இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர் நேரு ஆகியோர் இனைந்து திருச்சி மாநகராட்சியை மேன்மேலும் வளர்க்க வேண்டும், பல நல்ல திட்டங்களை தொடர்ந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர்” என கூறினார்.