ஸ்வச் சுர்வேக்‌ஷன் 2021 என்ற பெயரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு தூய்மையை கடைபிடிக்கின்றன என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதை அடுத்து, தூய்மைப் பணிகள் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ’ஸ்வச் பாரத் அபியான்’ என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தூய்மையான நகரங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.


இதில் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்கள், 1 முதல் 10 லட்சம் பேர் கொண்ட சிறிய நகரங்கள், ஒரு லட்சத்திற்கும் கீழ் என தனித்தனியே பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் 2021ஆம் ஆண்டிற்கான தூய்மை நகரங்களின் தரவரிசைப் பட்டியல் ஸ்வச் சுர்வேக்‌ஷன் என்ற பெயரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் 23 சிறிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சுவச் சர்வேக்சன்' படி, ஒவ்வொரு ஆண்டும், நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில் 4,320 நகரங்களில் 28 நாட்கள் நடந்த இந்த கணக்கெடுப்பில் 4.2 கோடி பேர் கருத்து தெரிவித்தனர். இதில் சென்னை 43வது இடத்திலுள்ளது. கடந்த வருடம் 45 ஆவது இடத்தில் இருந்த நிலையில் நடப்பாண்டு முன்னேற்றம்அடைந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஒருங்கிணைந்து தூய்மை பணிகளுக்கு அளித்த முக்கியத்துவமே காரணம் என்று தெரிகிறது. கோயம்புத்தூர் நகரம் 40-லிருந்து 46 வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை 47 ஆவது இடத்திலும், பெரிய நகரங்களின் பட்டியலில் திருச்சி, ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகியவை இடம் பெற்று உள்ளன.




திருச்சி 102-வது இடத்திலிருந்து 121 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. தாம்பரம் 314ல் இருந்து 200க்கும், பல்லாவரம் 283ல் இருந்து 233க்கும், ஆவடி 367ல் இருந்து 267க்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதுதவிர சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்கள் தூய்மைப் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி கடந்த ஆண்டு 102 இடத்தில் இருந்தது. தற்ப்போது 121 இடத்திற்க்கு சென்றுள்ளது.இதற்க்கு காரணம் திருச்சி மாவட்ட நிர்வாகம் தான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நாட்டிலேயே முதலிடத்தில் இந்தூர் உள்ளது.  சூரத், விஜயவாடா, நேவி மும்பை, டெல்லி, அம்பிகாபூர், திருப்பதி, புனே, நொய்டா, உஜ்ஜைன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் விடா, லோனாவாலா, சவ்சாத், பஞ்ச்கானி, துங்கர்பூர் ஆகியவை இருக்கின்றது.