திருச்சி அரசு மருத்துவ மனையில் பொது மருத்துவம், இருதயவியல், குழந்தைகள் நலப்பிரிவு, மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, மனநலப்பிரிவு, ஒட்டுறுப்பு பிரிவு, குடல்நோய் சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அதிநவீன சிகிச்சை பிரிவு, விபத்து அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 4,500 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.


திருச்சி மருத்துவமனை:


மேலும் உள் நோயாளிகளாக 1,200 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளின் வசதிக்காக சி.டி,ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், வயிறு சம்பந்தப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன ஸ்கேன் வசதிகள் உள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருதயவியல், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, புற்று நோய் கட்டி அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.


 






 


ஊக்கை விழுங்கிய குழந்தை:


இந்நிலையில் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில்  விமான நிலையம் அருகில் உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை உணவு உட்கொள்ளும் போது தவறுதலாக ஊக்கை முழுங்கியது. இதனால்  குழந்தை மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்து என்ன காரணம் என்று தெரியாத பெற்றவர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்திருந்தனர். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தொண்டை பகுதியில் ஊக்கு இருப்பதனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். 




டியூப் வழியாக வெளியில் எடுத்த மருத்துவர்கள்:


இதனை அடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்  உள்ள காது மூக்கு தொண்டை துறையின் தலைமை மருத்துவர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டு டியூப் வாயிலாக ஊக்கை வெளியே எடுத்தனர். இந்த நிலையில் தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண