அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதரவு யாருக்கு? என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பொதுக்குழுவிற்கு அழைப்பிதழ் அனுப்புதல் தொடர்பாக விவாதிகபட்டதாக தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சுயநலத்திற்காக சாதியை பயன்படுத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம். அவர் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். ஓபிஎஸ், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும், ஒரு நன்மையும் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த 19 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களில், 2 பேர் தவிர மற்ற, 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி ஜாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என்று நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர். மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இல்லை. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது. 95 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர்.




மேலும் அதிமுக கட்சியின் உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அவர்களும் விரைவில் உதிர்ந்து போவார்கள். ஓபிஎஸ்சும், அவரது மகனும் திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளனர். அவர்கள் திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதை கண்டு தொண்டர்கள் கொந்தளித்து போய் உள்ளனர். வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். குறிப்பாக ஓபிஎஸ், தினகரன், சசிகலா சுற்றுப் பயணங்களால்  அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார். மேலும் அடுத்தது தமிழகத்தில் அதிமுக  ஆட்சிக்கு வர வேண்டும். அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையான தலைவர் இருந்தால்தான் முடியும். எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியில் துணிவோடும், தனித்தன்மையோடும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார். ஆகவே அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே எங்களின் விருப்பம் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண