திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயம் தேவை; மதுக்கடையை குறைக்க வேண்டும் - துரை வைகோ எம்பி

பூரண மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே மதிமுகவின் கொள்கை. படிபடியாக மதுக்கடையை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Continues below advertisement

திருச்சி மாநகர்,  தனியார் நட்சத்திர ஹோட்டலில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து போது கூறியது..

Continues below advertisement

திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அங்கு போதிய ஒடுதளம் இருந்தால் தான் விமானங்கள் வந்து செல்ல முடியும்.

எனவே ஓடு தள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளேன். விமான நிலையத்தில் இஸ்லாமியருக்கு தொழுகைக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இ-வாகனம் சேவை, கார்கோ விமானம் இயக்க பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ய கவுண்டர்கள் அதிகம் அளவில் இருந்தாலும் அதிகாரிகள் குறைவு, பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளதால் அதிகாரிகள் அதிக அளவில் நியமிக்க பரிந்துரை செய்துள்ளேன்.

திருச்சி விமான நிலைய விரிவாக்கம் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள 5 சதவீத பணிகளை துரிதப்படும் வகையில் பேசி வருகிறோம். 155 ஏக்கர் பாதுகாப்புத்துறை இடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளது. சில கிராமங்களுக்கான பாதை நடைபெறுவதால் தொடர்ந்து பேசி வருகிறோம் விரைவில் அந்த நிலங்களும் கையகப்படுத்தப்படும். திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருத்தில் பெயர் பலகை இருந்தது தேவையிலலாத ஒன்றாகும். அதனை படித்தால் பயணிகளுக்கு ஏதும் தெரியாது.

தற்சமயம் மூன்று பேருந்துகள் விமான பயணிகளை ஏற்றி, இறக்கிவிட ஏற்பாடு செய்யப்படுள்ளது. விமான நிலையத்தில் நிரந்தர பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வக்பு போர்டு சட்ட திருத்தம் தேவையில்லை.


அரசு பள்ளியில் நடந்தது சனாதானா சொற்பொழிவு - துரை வைகோ குற்றச்சாட்டு

சென்னையில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மீகம் சொற்பொழிவு அல்ல. சனாதானா சொற்பொழிவு. இவர் இந்து மத பெயரை கூறி பொழப்பு நடத்தும் அற்பன். இந்த விஷயத்தில் மகா விஷ்ணுவை அழைத்து வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பூரண மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே மதிமுகவின் கொள்கை. படிபடியாக மதுக்கடையை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கிறோம். தொடருவோம். மதவாத சக்தி வேறுன்ற கூடாது என்பது எங்களது நோக்கம். 2026ம் ஆண்டு தொடர வேண்டும் என்று தான் நினைக்கிறோம் என்றார்.

மேலும் வளர்ந்து வரும் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் என்பது தேவைப்படும். அந்த வகையில் திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயம் தேவை என்றார். 

மேலும், பேட்டியின் போது மாநில துணை பொதுச் செயலாளர் ரொகையா, மாவட்ட தலைவர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன், முருகன், ஆடிட்டர் வினோத், கோபால கிருஷ்ணன், வட்டச் செயலாளர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola