தமிழகத்தில் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் இருக்கும் 65 வார்டுகளில்  கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், அன்பல் மகேஷின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.


மேயர் - துணை மேயர் பதவி:


திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரையில் திமுக 49, காங்கிரஸ் - 5, அதிமுக - 3, மதிமுக - 2, அமமுக, சிபிஐ, சிபிஎம், விசிக தலா ஒரு இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக.வை பொறுத்தவரை மேயர் வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுந்த போது, நேருவின் ஆதரவாளர்களுக்கு, அன்பில் மகேஷ் ஆதரவாளர்களுக்கு கடுமையாக போட்டி ஏற்பட்டது. இந்நிலையில்  தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நெருவின் தீவிர ஆதரவாளர், விசுவாசியாக இருக்கும் மு.அன்பழகன் தான் மேயர் என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. மேலும் துணைமேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளதது. கடையாசியாக அன்பில் மகேஷின் ஆதரவாளர் திவ்யா விற்கு கிடைத்தது. 




 


மேலும் திருச்சி மாமன்ற கூட்டம் எப்பொது நடந்தாலும் திமுக கட்சி ஒன்றாக இருந்தாலும் , மாநகராட்சியில் இரண்டு அணிகளாக செயல்படுவார்கள் என கருத்து தொடர்ந்து பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த மேயர் அன்பழகன் கூறியது, நாங்கள் அனைவரும் ஒன்று தான். எங்களுக்குள் பிரிவினை இல்லை என கூறினார். ஆனால் மேயர் அன்பழகன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். ஆனால் எப்பொதுமே மாநகராட்சியில் இரு அணிகளாக தான் செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு சுதந்திர தின நிகழ்ச்சியே சான்றாக அமைந்துவிட்டது.


புறக்கணித்த அமைச்சர், மேயர் ஆதரவாளர்கள்:


நாட்டின் 77 வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யபட்டதை தொடர்ந்து, மேயர் அன்பழகன், ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலின் கையால் விருது வாங்குவதற்கு சென்னை சென்றனர். ஆகையால் இன்று திருச்சி மாநகராட்சியில் தேசிய கொடியை துணை மேயர் திவ்யா ஏற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்களாக இருக்கும் மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


அதே நேரத்தில் அமைச்சர் நேரு மற்றும் மேயர் அன்பழகனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். மேயர் அன்பழகன் இல்லாததால் , அவருடைய ஆதரவாளர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருச்சி மாநகராட்சியில் அமைச்சர் நேரு, மேயர் அன்பழகன் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் செயல்படுவது உறுதியாகிவிட்டது.