தஞ்சாவூர்: புதுப் பொலிவு பெற்றுள்ள திருச்சி பஞ்சப்பூரில் குளத்தை சீரமைக்க மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியுள்ளதாம். இதற்காக ரூ.23.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செஞ்சு இருக்காங்க. இனி திருச்சியின் அடையாளம் என்றால் அது பஞ்சப்பூர்தான் என்று சொல்லும் அளவிற்கு வளர்ச்சியில் அசுர வேகம் காட்டி வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் குளத்தை 23.2 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த குளம், கொட்டப்பட்டு குளம் போல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வரத்து மற்றும் வெளியேறும் வழிகள் சீரமைக்கப்படும் என்று சொல்றாங்க.
இந்த பஞ்சப்பூர் குளத்தை மேம்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 23.2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH) இந்த குளம் இருக்கிறது. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு (IBT) அருகிலேயே இந்த குளம் இருக்கிற காரணத்தால் சில பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்க்க இருக்காங்களாம். குளத்தின் அருகில் மக்கள் பொழுதை கழிக்கும் வகையில் வசதிகள் செய்ய இருக்காங்களாம். அதாவது இதையும் ஒரு பூங்கா போல் மாற்ற இருக்காங்க.
43.4 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்த பஞ்சப்பூர் குளத்தை தூர் வார திட்டமிட்டுள்ளனர். குளத்தோட கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தின் அருகில் இருக்கும் கொட்டப்பட்டு குளம் மாதிரி இந்த குளத்திலும் நிறைய வசதிகள் செய்ய இருப்பதாக தகவல்கள் வலுவாக கிடைத்துள்ளது.
குளத்துக்கு தண்ணீர் வரும் வழியையும், தண்ணீர் வெளியே செல்லும் வழியையும் சரி செய்ய இருக்காங்க. காவிரி தண்ணீரை சேமிக்கவும் யோசனை இருக்காம். அதுமட்டுமா? அலங்கார விளக்கு என்ன... பெஞ்சுகள், குழந்தைகள் விளையாடற இடம் என்னன்னு ஏகப்பட்ட வசதிகள் செய்து இதை சுற்றுலா தலம் போல் மாற்ற இருக்காங்க. அதுமட்டுமா? இன்னும் என்ன வசதிகளும் செய்யலாம்னு யோசிக்கிறாங்கப்பா. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், முதலில் திருச்சி மாநகராட்சி 7 குளங்களை மேம்படுத்தலாம் என திட்டம் தீட்டியது. ஆனா பட்ஜெட் பெரிசா இருந்துச்சு. அதனால் இப்ப முதற்கட்டமாக பஞ்சப்பூர் குளத்தை மட்டும் மேம்படுத்த இருக்காங்க. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் நிறைய பயணிகளை ஈர்க்கும். நகரமும் தெற்கு பக்கம் விரிவாக்கம் ஆகும். அதனால பஞ்சப்பூர் குளத்தை நன்றாக மேம்படுத்தினால் அந்த பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பஞ்சப்பூரை சுத்தி நிறைய வளர்ச்சி இருக்கும் என்று கால்குலேஷன் போட்டு இருக்காங்க. இந்த குளத்தை மேம்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பது அடுத்த கால்குலேஷன் என்று தெரிவித்தனர்.
பஞ்சப்பூர் குளத்துக்கு ஒரு திட்டம் தயாராக உள்ளது. அதேபோல் மற்ற 6 குளங்களையும் மேம்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான பணத்தை மத்திய, மாநில அரசுகளோட திட்டங்கள் மூலமா திரட்ட போறதாக கூறப்படுகிறது. திருச்சி நகரத்தில் எந்தெந்த குளங்களை நீர் மேலாண்மை திட்டத்தில் சேர்க்கப்படும் என்ற சில தகவல் கிடைச்சு இருக்கு.
அந்த குளங்கள் புங்கனூர் குளம் - 133 ஹெக்டேர், கோத்தமங்கலம் பெரிய குளம் - 61.1 ஹெக்டேர், பிராட்டியூர் குளம் - 48.2 ஹெக்டேர், பஞ்சப்பூர் குளம் 43.4 ஹெக்டேர், கல்லுக்குடி குளம் - 22.4 ஹெக்டேர், மலைப்பட்டி குளம் - 16 ஹெக்டேர், கோத்தமங்கலம் சிறிய குளம் - 12.3 ஹெக்டேர், மொத்தமாக இந்த குளங்களில் பரப்பளவு - 336.7 ஹெக்டேர்
இதுல தண்ணீர் வரத்து, மற்றும் தண்ணீர் செல்லும் வழி சரி செய்யப்படும். குளத்தை தூர் வாரி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பொழுதுபோக்குக்காக குளத்தில் தனியாக இடம் அமைத்தல் என்று செம திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. இனி பஞ்சப்பூர்... பளபளப்பூர்தான் போங்க.