ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் எனவும் 108 வைணத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் 365 நாட்களும் திருவிழா நடந்து வருகிறது. இதில் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு பிரசித்தி பெற்றதாகும். இதில் ராப்பத்து, பகல் 10 என 20 நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதேசி விழாவில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து செல்வார்கள் . இதில் சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட பத்து நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீரங்கம் வந்து செல்வார்கள். இதற்கிடையே வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வந்த புகாரை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை உத்தரவின்படி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பெயரில்  ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றப்பட்டது.  ஸ்ரீரங்கம் மண்டலம் எண் 1 உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மூலம் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. 




அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் மண்டலம் எண் 1 உதவி ஆணையர் ரவி ஆகியோர், ஸ்ரீரங்கத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வைகுண்ட ஏகாதேசிய முன்னிட்டு அம்மா மண்டபத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை குறித்தும் ,தூய்மை பணியாளர்கள் மேற்கொள்வது குறித்து ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கினார். அதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி உள்ள உத்தர வீதிகளில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரங்கா ரங்கா கோபுரம் அருகே நவீன கழிவறை உள்ளது.  இந்த கழிவறை போதுமானதாக இல்லை எனவும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிவறைகள் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




இதை அடுத்து மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் உதவி ஆணையர் ரவி உள்ளிட்டோர் கிழக்கு கோபுரம் பகுதியில் கழிவறை கட்டுவதற்காக இடம் குறித்து ஆய்வு நடத்தினர். மேலும்  வைகுண்ட ஏகாதேசி நாட்களில் இந்தப் பகுதியில் நடமாடும் கழிவறை வாகனங்கள் அமைக்கப்படும், என்பதை அறிந்து அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வை தொடர்ந்து கிழக்கு கோபுரம் அருகே பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்க மாநகராட்சி ஆணையர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.