திருச்சி மாநகரில் பல இடங்களில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவு நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் மற்றும் திருச்சி சிறப்பு தனிப்படையுடன் இணைந்து சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்சி பாலக்கரை மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்கி உள்ளனர்.அந்த லாட்டரி சீட்டில் பணம் கிடைத்துள்ளது. பணத்தை தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கும் பொழுது அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்து மேற்கண்ட இரண்டு வாலிபர்களையும் மிரட்டி அவர்களிடமிருந்து ரூபாய் 5000 பணத்தை பறித்துக் கொண்டு விரட்டி விட்டனர்.




இதுகுறித்து இருவரும் தனித்தனியாக காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் காந்தி மார்க்கெட் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் லாட்டரி சீட் விற்பனை செய்யும் கும்பல் பிடிப்பட்டது. இவர்கள் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி காந்தி மார்கெட் மற்றும் பாலக்கரை பகுதியில் டீக்கடை அருகில் 3 நம்பர் லாட்டரி மற்றும் ஆன்லைன் லாட்டரி தொடங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்பட போலீசார் லாட்டரி சீட்டு விற்றவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டையை சேர்ந்த சூசை என்கிற அய்யனார் (வயது 40), இளையான்குடியை சேர்ந்த ஜெகன் (22), விஷ்ணு ( 23), பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத் (24), கர்நாடகாவை சேர்ந்த ஆரோக்கியசாமி (20), திருச்சி பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் (47) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (37)என்பது தெரிய வந்தது. மேற்கண்ட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ரூ.20 ஆயிரம், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.