திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் ராஜேஷ் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். கார் காட்டூர் ஆயில் மில் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து ராஜேஷ் காரில் இருந்து கீழே இறங்குவதற்குள் முன்பகுதியில் தீப்பற்றி கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவி, குழந்தையுடன் காரில் இருந்து உடனடியாக இறங்கினார். இதைத்தொடர்ந்து தீ கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


 






 


இதனைத்தொடர்ந்து, திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கார் எரிந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ராஜேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு காரை விட்டு உடனடியாக இறங்கி சிறிது தூரம் சென்றதால் உயிர் தப்பினர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.