திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு விமான சேவைகளாக திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், புதுடெல்லி போன்ற நகரங்களுக்கும் விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிந்தோ, ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வெளிநாடுகளுக்கும் சிறப்பு மீட்பு விமானங்களாக இயக்கப்பட்ட விமான சேவைகள் அனைத்தும் தற்போது தினசரி விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் வெளிநாடுகளுக்கான விமான சேவை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 200 உள்நாட்டு விமான சேவைகளில் திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 15,482 பயணிகளும், வெளிமாநிலங்களில் இருந்து திருச்சிக்கு 13,146 பயணிகளும் என மொத்தமாக 28,628 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 





மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பு நடைமுறைகள் வழங்கப்பட்டு வருவதனால் பயணிகள் எளிதான முறையில் விமானங்களில் பயணம் செய்வதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 201 உள்நாட்டு விமான சேவைகளில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவைகளில் மொத்தம் திருச்சியிலிருந்து 18,666 பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதேபோன்று வெளியூர்களில் இருந்து திருச்சிக்கு 201 உள்நாட்டு விமான சேவைகளில் 11,411 பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இதேபோன்று திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட 246 விமான சேவைகளில் 32,909 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்பட்ட 247 விமான சேவைகளில் 38,218 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்நாட்டு விமான சேவைகளில் மொத்தம் 30,077 பயணிகளும், வெளிநாட்டு விமான சேவைகளில் மொத்தமாக 68,127 பணிகளும் பயணம் செய்துள்ளனர்.




இந்நிலையில் கடந்த மே மாதத்தில் 200 உள்நாட்டு விமான சேவைகளில் திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 15,482 பயணிகளும், வெளிமாநிலங்களில் இருந்து திருச்சிக்கு 13,146 பயணிகளும் என மொத்தமாக 28,628 பயணிகள் பயணம் செய்துள்ளனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு விமான சேவைகளாக இயக்கப்பட்ட 291 விமான சேவைகளில் 42,546 பயணிகளும், வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்பட்ட 201 விமான சேவைகளில் 41,402 பயணிகளும் என மொத்தமாக 83,908 பயணிகள் வெளிநாட்டு விமான சேவைகளை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் விமான சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்திருப்பதும் இதேபோன்று ஜூன் மாதத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண