திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவில் உள்நாட்டு மற்றும் விமான சேவைகள் அளிக் கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் தொடர்ந்த போதிலும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாக விமான நிலைய வளாகத்திலும், அதன் நுழைவு வாயில் பகுதியிலும் சுற்றித்திரியும் நபர்களிடமிருந்து எந்தவித ஆவணமும் இல்லாத வகையில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.24.57 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருந்ததை அறிந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.

 

இதேபோல், திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த மலேசியாவை சேர்ந்த பெண் பயணியான அக்ரோசியா முகமது இப்ராஹிம் (வயது 47) என்ற பயணி தனது உடமையில் மறைத்து ரூ.21 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாயான 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளிநாட்டிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு மற்றும் இந்திய பணம் ரூ.45.57 லட்சம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 



 

இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாடி இந்நிலையில் கடந்த சில தினங்களாக விமான நிலையம் நுழைவுவாயிலில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் கையில் நகைகளுடன் சுற்றும் தரகர்களை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் பிடித்து அவர்களிடமிருந்து தொடர் விசாரணை மேற்கொள்வதும் தற்போது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது உசேன் (வயது30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 308 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்து ஏர்போர்ட் போலீசார் ஜாமினில் அவரை விடுதலை செய்தனர்.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.