1-திருச்சி மாவட்டம் துறையூர் அருகே குண்டாரு கரை உடைந்து விவசாய நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதால் பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
2- திருச்சி மணப்பாறை அருகே பாகுபாடு பார்த்து வேலை வழங்குவதாக கூறி 100 நாள் திட்ட பயனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
3- திருவெறும்பூர் அருகே திருநெடுங்களம் செல்லும் வழியில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக தூக்கில் தொங்கிய ஆண் சடலத்தை மீட்டு துவாகுடி காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
4- தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து வரும் நிலையில் மணப்பாறை துவரங்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு செய்த வாலிபரை மகளிர் காவல் நிலையம் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
5- திருச்சி மாவட்டத்தில் என்று 515 இடங்களில் 12 வது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது மாவட்ட நிர்வாகம்.
6- திருச்சி மாவட்டம் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்வநகர், லிங்கா நகர், ராஜலட்சுமி நகர், உறையூர் பகுதிகளில் மழை நீர் வீடுகள் முழுவதும் சூழ்ந்துள்ளது, மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு நேரில் ஆய்வு
7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொடர் கனமழையால் வெள்ளநீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சம், மேலும் மின்சாரம் இல்லாமலும், அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல முடியாமலும், மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
8- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது. இவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
9- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து ஆடு திருடு போவதாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலையாளப்பட்டி கிராமங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,குறிப்பாக மரவள்ளிக்கிழங்கு விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு..