1- திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாநகரில் விரிவாக்க பகுதிகளில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன,மேலும்  திருச்சி மாநகர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் கோரையாறு, உய்யகொண்டான், குடமுருட்டி ஆறுகளில்  நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்..


2- திருச்சி அருகே உள்ள புங்கனூர் இருந்து அல்லித்துறை செல்லும் வழியில் உள்ள அரியாற்றில் தொடர்கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கால் ஆற்றின் தென்கரையில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாக மூழ்கியதால் விவசாயிகள் வேதனையுடன் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


3- திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பான  சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் கனமழை தொடர்வதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


4- திருச்சி மாவட்டத்தில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் நேரு.இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் மணப்பாறை பகுதிகளில் அதிக மழை பெய்ததால் அன்பு நகர் வழியாக வரும் தண்ணீர் கொல்லான்குளத்தை நிரப்பி தேசியக் கல்லூரி வழியாக கோரையாற்தில் வடியும் இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது,அவற்றை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த  சாலைகளை சீரமைக்க ரூ 600 கோடி நிதி  ஒதுக்கப்பட்டு டெண்டர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


5- திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்தி மேடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஐயன்வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இதனால் சம்பா சாகுபடி மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதால் உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


6- மணப்பாறை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஏராளமான குளங்களில் உபரிநீர் மறுகால் பாய்ந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மணப்பாறை குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் நீரால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து மக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


7- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள், நிரம்பி வழிகின்றன.  காரையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த  பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும்  அப்பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் சேதமடைந்துள்ளது மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அச்சத்தில்  வசித்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


9- திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் தொடர்ந்து நான்காவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


10- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேசமயம் கனமழை காரணமாக 1403 வீடுகள் இடிந்து விழுந்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மக்களுக்கு பாதுகாப்பான  சூழ்நிலையை ஏற்படுத்த அதிகாரிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.