நாடு முழுவதும் சுங்கசாவடி கட்டணத்தை உயர்த்தபட்டதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் லாரி உரிமையாளர் போராட்டம் நடத்தினர். மேலும் உடனடியாக உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் கோரிக்கையை அனைவரும் எழுப்பி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்து வரும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை சுங்க கட்டணத்தை உயர்த்துவது வழக்கமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வானது ஏற்கனவே காருக்கு ஒரு நடைக்கு ரூ. 75இல் இருந்தது. தற்போது ரூ80 தாகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ 110 ல் இருந்து ரூ120 ஆகவும் மாதாந்திரம் ரூ2210 ல் இருந்து ரூ2420 ஆகவும் உயர்ந்தது. அதேபோல் டாட்டா ஏசி போன்ற வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.130இல் இருந்தது தற்போது ரூ.140 தாகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ.190ல் இருந்து ரூ.210ஆகவும் கட்டணம் மாதாந்திர கட்டணம் ரூ 3870ல் இருந்து 4230 ஆகவும் உயர்ந்தது. பஸ் ஒரு நடைக்கு ரூ.260 இருந்தது. தற்போது ரூ.280 தாகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ.385ல் இருந்து ரூ.425 ஆகவும் மாதந்திரம் ரூ 7735ல் இருந்து 8465 ஆகவும் கட்டணம் உயர்ந்தது.
மேலும், டாரஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ஒரு நடைக்கு ரூ.415ல் இருந்தது தற்போது ரூ 455 தாகவும், இரு முறை பயன்பாட்டிற்கு ரூ 620 ல் இருந்து ரூ 680 ஆகவும் மாந்திரம் ரூ 12435ல் இருந்து ரூ 13600 ஆகவும் கட்டணம் உயர்கிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அதனால் அப்பாவி பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை கண்டித்து தேமுதிக கட்சி சார்பில் தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் கட்சியினர் துவாக்குடி வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இந்த சம்பவத்தால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.