தமிழகத்தின் மத்திய மாவட்டம் திருச்சியில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது. அதில் குறிப்பாக  திருச்சி நகரத்தில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் ஆகும். பல நூற்றாண்டுகளைக் கடந்து பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)  மேலும்  மலைக்கு செல்லும் போது  தாயுமானவர் சன்னதியை கடந்து தான் பிள்ளையார் சன்னதிக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏறி செல்ல வேண்டும். மேலும் மிகவும் பழமையான கோயில் என்பதால் பல மாநிலம், நாடுகள் என  இடங்களிலிருந்து மக்கள் அதிக அளவில் வருவது தான் இதன் சிறப்பு ஆகும். பல ஆண்டுகளாக மக்கள் இந்த கோயிலுக்கு ரோப் கார் அமைத்து தருமாறு மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.





தமிழகத்தில் 1977-ல்  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 10 லட்ச ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்கள், 'ரோப் காருக்கு பதிலாக இழுவை ரயில் அமைக்கலாம்’ என்று யோசித்தனர். ஆகையால் திட்டம் கைவிடப்பட்டது.  கடந்த தேர்தல் நேரத்தில் மலைக்கோட்டைக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க-வினர் வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் வெற்றிபெற்ற பிறகு, அந்தத் திட்டத்தை மறந்துவிட்டனர்.  தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க அரசு மீண்டும் இந்த திட்டத்தை கையில்  எடுத்திருக்கிறது. இந்த திட்டத்தை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்பில்  திருச்சி மக்கள். மேலும் தமிழகத்தில் இந்து அறநிலை துறைக்கு கீழ் இயங்கும் கோயில்களை சீரமைப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோயில்களின் சிறப்புகள், வரலாறுகள் என அனைதையும் டிஜிட்டல் முறையில் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிர்மாக  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள  மாணிக்க விநாயகர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகிய பகுதிகளில்  இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.





அப்போது  திருச்சி மக்கள்  273 அடி உயரமுள்ள மலைக்கோயிலுக்குச் செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்குச் செல்வதற்குள் ரொம்ப சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். நடக்க முடியாதவர்களும் படிக்கட்டில் ஏற முடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச் சென்றுவிடுகின்றனர் ஆகையால் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர்.


பின்பு அமைச்சர் சேகர் பாபு அவர்கள்  மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருநீர்மலை முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் ரோப் கார் வசதி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.எனவும், ஒவ்வொரு கோயிலாக ஆய்வு செய்துவருகிறோம் என்றார். திருச்சி மலைக்கோட்டை கோயிலிலும் ஆய்வு செய்தோம். விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன், உலகத்தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ரோப்கார் திட்டம் இந்த ஆட்சியில் நிறைவேற்றபடும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என தெரிவித்தனர். மேலும் தமிழக முதல்வர் அனுமதி அளித்து விரைவில் இந்த திட்டத்தை நிறைவெற்ற வேண்டும் என வேண்டுக்கோள் வைத்துள்ளனர்,திருச்சி மக்கள்.