புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியை சேர்ந்தவர்கள் செல்வமுத்து-ரீட்டா மேரி. இந்த தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் லோகேஸ்வரி. இவர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் லோகேஸ்வரி மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காக லோகேஸ்வரி சென்றிருந்தார்.  இதற்கிடையில் லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார். தந்தை இறந்த செய்தியை மகளுக்கு தெரிவித்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார். போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவுடன் தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. 


 






 


இந்நிலையில், பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். அவர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்கம் வென்ற சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்காமல் லோகேஸ்வரிக்கு அவரது தந்தை இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த நிலையில் லோகேஸ்வரி தனது சொந்த கிராமமான கல்லுகாரன்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர் தனது தந்தையின் சமாதிக்கு சென்று தான் வென்ற தங்க பதக்கத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.




தான் தமிழ்நாட்டிலிருந்து சென்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றதை பெருமையாக கருதுகிறேன் என்றும், எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவர் ராஜா, செயலாளர் நாகராஜன், பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் நான் வென்ற பதக்கத்தை தந்தையிடம் காட்டி வாழ்த்து பெற முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.