தமிழக காவல்துறையில் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள், போதை பொருள் விற்பனை போன்ற பல குற்ற சம்பவங்கள், அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர சோதனையிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேலும் குற்றவாளிகளை சுலபமாக பிடிப்பதற்கு முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் திருச்சியில் இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்தப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்கள் காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளின் முகம், கைரேகை, ஆதார் கார்டு, கண்விழிகள், உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட்டது. இந்த ஆவணங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று தலைமறைவானவர்கள் மற்றும் தப்பியவர்களை காவல்துறையால் விரைவில் அடையாளம் கண்டுவிட முடியாது. இவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் விதமாக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திட்டம் சென்னையில் நேற்று நேற்று முன்தினம் ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியது..முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் திருச்சிக்கு வந்துள்ளது காணாமல் போனவர்களையும் இந்த மென்பொருள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றார்.
மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவல் அலுவலர்கள், ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர், இந்த மென்பொருளை பயன்படுத்துவார்கள் இதன் மூலம் சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் இந்த மென்பொருளை பயன்படுத்தி குற்றவாளிகள் ஊடுருவல் உள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த புதிய மென்பொருள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிக்காக சென்னையிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் மாநகர காவல் துறைக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். பின்பு புதிய மென்பொருள் திருச்சி மாநகர காவல் துறையினரிடம் அடுத்தவாரம் முதல் அமல்படுத்தப்படும் என்றார் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்.