திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில்  விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், அதிகாரிகள்  அனைவரும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆரம்பித்த சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உதவி வனக்கோட்ட அலுவலர் வந்து உள்ளாரா என கேட்டார். அப்பொழுது வனத்துறையிலிருந்து வந்த வனச்சரகர்கள் எழுந்து நின்று வரவில்லை என பதிலளித்த போது (Go out) என கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேற உத்தரவிட்டார். இதற்கு விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 




மேலும் கடந்த முறை நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் வலியுறுத்தினார். அதன் நிலை குறித்து இன்று கேட்க முற்படும்பொழுது திருச்சி உதவி வனக்கோட்ட அலுவலர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு  வரவேண்டும் என்று ஆட்சியர் உத்தரவையும் ஏற்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆகையால்  வனசரகர்களை பார்த்து கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்ட்டார். இதனால்  சிறிது நேரம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு  ஏற்ப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியிரிடம் தெரிவித்தனர்.




இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். அதில் தனியார், நெல் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் பெரிய ஆலைகள் நெல்லை நேரடியாக விவசாயிகள் இடமிருந்து வாங்காமல் முகவர்கள் மூலமாகக் கொள்முதல் செய்வதால் அரசு அறிவித்த ஈரப்பதம் மற்ற விஷயங்கள் தங்களுக்குப் பொருந்தாது என்று கூறி வருகின்றன. எனவே, அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.


அதேபோல் 100 நாள் திட்டத்தில் செயல்படுத்த முடியாத ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணிகளை அம்ரிஷ் சரோவர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் செயல்படுத்துவதை மாவட்ட திட்ட இயக்குநர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புள்ளம்பாடி கால்வாய் தினம் அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் முன்பு கோரிக்கையாக விவசாயிகள் முன் வைத்தனர். மேலும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். அவை அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.