திருச்சி மாவட்டத்தில் தொடர்கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மழையினால் திருச்சி மாவட்டம்  வயலூர் சாலையில் உள்ள ஆதிநகரின் வழியாகச் செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றில் நீர்செல்லும் அளவினையும், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தினையும் பார்வையிட்டு, ஆற்றின் கரைகளில் உள்ள செடிகளை அகற்றி, தூர்வாரிடவும், உயரம் குறைவாகவும் பழுதடைந்தும் உள்ள ஆற்றின் குறுக்கு பாலத்திற்கு பதிலாக புதிதாக உயர்மட்டப் பாலம் அமைத்திட  உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில்  மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள்  எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு கூறியதாவது, அதிமுகவினர் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என  குற்றச்சாட்டினார். மேலும் வடகிழக்கு பருவமழையால் திருச்சி உய்யக்கொண்டான் ஆறு மற்றும் கோரையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக லிங்க நகர்‌, சண்முகா நகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வயல்களில் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.மேலும் கடந்த காலகட்டங்களில் அதிமுகவினர் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை - சின்னச்சின்ன பணிகளை மட்டும்தான் செய்து உள்ளார்களே தவிர முக்கிய பணிகளை செய்ய தவறிவிட்டனர். குறிப்பாக சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.




முக்கிய பிரச்சினை என்னவென்றால் சென்னையில் சில இடங்களில் மெட்ரோ வாட்டர் குழாய்கள்,
டிரென்னேஜ் குழாய்கள் பதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் மேல் ஆகிறது, எனவே இது குறித்து முதல்வரிடம் நாங்கள் கேட்டுள்ளோம் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் உள்ள குழாய்களை மாற்றி அமைக்க உள்ளோம், நிரந்தரமாக பம்பிங் செய்யக்கூடிய முறையை ஏற்படுத்த உள்ளோம் அதற்காகத்தான் தற்போது முதல்வர் குழு ஒன்றை அமைத்துள்ளார். ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வல்லுனர்களை கொண்ட குழுவினர் என்ன சொல்கிறார்களோ அதை நாங்கள் செய்வோம், Under ground drainage பணிகளை துவங்கி முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் சென்னையில் 4 ஆண்டுகள் கண்டிப்பாக ஆகும்.


நகர்ப்புற பகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் தேர்தல் ஆணையம் தான் தேதியை அறிவிக்க வேண்டும். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார் 800 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நாங்கள் செலவழித்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால் 800 கோடி எந்த இடத்தில் செலவு செய்தீர்கள் என்பதை எங்களுக்கு காட்டுங்கள் என்றால் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என்றார். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அவர்கள் பெரிதாக எதையுமே செய்யவில்லை, நடந்திருக்கும் தவறுகளை கண்டுபிடிப்பதற்காக விசாரணை கமிஷனை போட உள்ளோம் என்று முதல்வரே கூறியுள்ளார் என தெரிவித்தார்.