திருச்சி: தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. "வரும் 12 ஆம் தேதி எனது அரசியல் நிலைப்பாடு மற்றும் முக்கிய முடிவு குறித்து அறிவிப்பேன்" என்று பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு அதிரடித் தகவல் கோட்டை வட்டாரத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

​பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் புதிய அரசியல் கட்சியில், நடிகர் ராகவா லாரன்ஸ் இணையப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த விவகாரம், தமிழக முதலமைச்சர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழக' (த.வெ.க) முகாமில் பலத்த அதிர்வலைகளையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

​திடீர் பரபரப்புக்கு பின்னணி என்ன?

Continues below advertisement

​சமூக சேவைகளிலும், மக்கள் நலப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸ், விரைவில் வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்கப் போகிறார் என்ற சலசலப்பு கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. அவர் முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க சார்பில் போட்டியிடுவார் என்றே பலரும் கணித்திருந்தனர். ராகவா லாரன்ஸ்க்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகவும் நல்ல பெயர். நன்கு பிரபலம் ஆனவர். முக்கியமாக வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் பலருக்கும் பல்வேறு விதத்தில் உதவிகள் செய்து கொண்டு இருப்பவர். இதனால் இவர் தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் களம் இறங்கினால் அதிரிபுதிரி வெற்றிதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் திருச்சி பகுதி மக்களுக்கும் மிகவும் சிறப்பான நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர்.

​ஆனால், தற்போதைய டெல்லி மற்றும் தமிழக அரசியல் நகர்வுகளின்படி, அண்ணாமலை ஆரம்பிக்கவிருக்கும் புதிய அரசியல் பாதையில் லாரன்ஸ் பயணிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

​அரசியல் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாக்:

"அண்ணாமலையின் புதிய வியூகமும், ராகவா லாரன்ஸின் மக்கள் செல்வாக்கும் இணைந்தால் அது தற்போதைய ஆளும்கட்சிக்கு புதிய தலைவலியாக மாறும்."

​முதலமைச்சர் விஜய் முகாமில் அதிர்ச்சி?

​திரையுலகில் தனக்கு மிகவும் நெருக்கமான, ஆன்மீக மற்றும் சமூகப் பார்வையில் ஒத்த கருத்துடைய ராகவா லாரன்ஸ் தன் பக்கமே வருவார் என்று த.வெ.க தலைமை எதிர்பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால், லாரன்ஸ் அண்ணாமலை பக்கம் சாய்ந்தால், அது த.வெ.க-வின் வாக்கு வங்கியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என முதல்வர் விஜய் தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிகிறது.

​நாளை 11ம் தேதி... யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

​லாரன்ஸ் தரப்பு: "அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்ய மட்டுமே, பதவிக்காக அல்ல" என்று கூறி வரும் லாரன்ஸ், நாளை 11 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்திக்கும் போது ஒட்டுமொத்தப் பூடகமான கேள்விகளுக்கும் விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை தரப்பு: புதிய கட்சிக்கான அடித்தளத்தை பலமாக அமைக்க, லாரன்ஸ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் எண்ட்ரி மிகப்பெரிய பலமாக அமையும் என கணக்கு போடுகிறது.

​தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி நகர்வுகள், நாளை 11ம் தேதி லாரன்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின் இன்னும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கோட்டை உற்று நோக்கும் இந்த புதிய கூட்டணியின் பின்னணி என்ன என்பது இன்னும் 24 மணி நேரத்தில் வெளிச்சத்திற்கு வரவுள்ளது!