திருச்சி மாவட்டத்தில் தை பூசம் திருவிழா என்பதால் வயலூர் முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்கதர்கள் கோயிலின் வாசலில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். திருச்சியில் இருந்து மேற்கே, 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது  குமாரவயலூர் என்னும் வயலூர். இங்கு  வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர். மேலும் அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருக பெருமான் முதன்புதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று ஆகும்.




குறிப்பாக வயலூர் முருகப்பெருமான் என்று உலகெங்கும் பிரசித்தமான இந்த ஆலயத்தில் தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் முருகப்பெருமான் இணைந்து ஈசனை இங்கு பூஜிக்கிறார்கள் என்பது ஐதீகம். தனி சந்நிதியில் வள்ளி - தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். வயலூர் முருகப்பெருமான் முயலகன் இல்லாத சதுர தாண்டவ நடராஜர், முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம், வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சட்டத்தேர் விழா என இந்த ஆலயத்தில் அதிசயங்கள் அநேகம் உள்ளது.




ஆண்டு தோறும் தைபூசம் திருவிழா அன்று வயலூர் முருகன் பெருமாள் கோயிலில் ஆயிரக்கணகான பத்தர்கள் பால் குடம், அழகு குத்தி, காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இநிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்த பிறகு மாநில அரசு தளர்வுகள் அளித்து திருதலங்களுக்கு மக்கள் சென்று வழிபடலாம் என்று தெரிவித்து இருந்தது. ஆகையால் அனைத்து விசேச நாட்களிலும் மக்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். 




இந்ந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு தொடக்கம் முதலே மீண்டும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவதொடங்கியதால் அவற்றை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தளங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கபட்டது. இதனைதொடர்ந்து திருச்சி மாவட்ட நிர்வாகம் பொங்கல் பண்டிகளுக்கு மக்கள் அதிக அளவில் கூடும் இடமான வழிப்பாட்டு தளங்களுக்கு 14 ஆம் தேதி முதல் 18 தேதி வரை மக்கள் செல்ல தடை வித்தது. இதனை தொடர்ந்து இன்று  தை பூசம் விழாவை முன்னிட்டு திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் ஆலயத்தில் அதிகாலை முதல் மக்கள் கோயிலின் வாயிலில் வெளியே இருந்து சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து தரிசனம் செய்து வருகிறார்கள்.