திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.ஸ்ரீரங்கம் கோவில் மணவாள மாமுனிகளின் நியமனத்தின் படி 19 வருடங்களுக்கு ஒரு முறை இந்த வைகுண்ட ஏகாதசி (பகல் பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார். அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கிய பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வந்து பரமபத வாசலை கடக்கிறார்.




மேலும் 19 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகதேசி திருவிழா கார்த்திகை மாதம் கொண்டாடபட்டு வருகிறது. இதில் பகல் பத்து, இராபத்து என மொத்தம் 21 நாட்கள் கொண்டாடபடும்.இந்நிலையில் தினமும் ரங்கநாதரை பல்வேறு விதமாக அழங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதேபோல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் இன்று தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.மேலும் தெலுங்கானா முதல்வரை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் திருக்கோவில் யானையுடன் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கருட மண்டபம் வழியாக அரியப்படாள் வாசலை கடந்து மூலவர் சன்னிதியில் முத்தாங்கி சேவையில் காட்சி தரும் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார்.  பின்னர் கோயில் இருக்கு வாகனத்தில் தனது குடும்பத்துடன் சென்று ரங்கநாயகி தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.





அரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேட்டி கூறியது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இரண்டாவது முறை வந்துள்ளேன்,மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோயிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள்,அதற்கு தமிழக அரசுக்கு நன்றி. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழ்நாடு வந்துள்ளேன். மேலும் நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது அவரை சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.