அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது 17 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே மாவட்டம் அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ராசாத்தி (24) தனியார் பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆசிரியை, மாணவனுக்கு ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தனர். இதனை தொடர்ந்து காதல் விவகாரணம் வெளியே தெரிந்ததால், மாணவனுக்கு வயது குறைவு என்பதால் இருவரது வீட்டிலும் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள மூங்கில்பாடி என்கிற கிராமத்தில் உள்ள 10ஆம் வகுப்பு உறவினர் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு இருவரும் குடும்பம் நடத்தியதாக அவரது உறவினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அவர்களின் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருவரும் மனமுடைந்து விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.




பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மாணவன், ராசாத்தி இருவரும் டூவிலரில் குன்னம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற. பின்னர் ராசாத்தி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால் உயர் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் மாணவனின் குடும்பத்தினர் குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டுமாதமாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தநிலையில். தற்போது ராசாத்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் பெண் ஆசிரியர் கைது செய்யப்படிருக்கும் விவகாரம் தான் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வனத்துறையில் வேலை செய்வதாக கூறி இளைஞர் திருமணம்- ஹெலிகாப்டர் தளம் அமைப்பதாக கூறி மாமனாரிடம் பணம் கேட்டு நச்சரித்த போது சிக்கினார்



காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜனவரி 19ஆம் தேதி மேகதாதுவில் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு


தொடர்ந்து  வழக்கை விசாரித்துவரும் காவல்துறை அதிகாரிகளிடன் கேட்டபோது.. பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இருவரும் காதலித்திருக்கிறார்கள், கடந்த அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். மாணவனுக்குக் குறைந்த வயது என்பதால் அவர்களது பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அந்த பெண் மாணவனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் என்பது  விசாரணையில் தெரியவந்தது. அதன்படிதான் ஆசிரியையை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.


நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து மீண்டு வர ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை