திருச்சி -  திண்டுக்கல்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த சுமார்  12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்  பங்கேற்றனர். ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு என 30 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

 

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் பல அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில்  திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது.. ” 1952ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் தான் நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். கழகத்தின் கோட்டை மட்டும் அல்ல, தீரர்கள் கோட்டம்தான் இந்த திருச்சி. நேரு என்றால் மாநாடு,  மாநாடு என்றால் அது நேரு என்று அடிக்கடி நான் கூறுவேன். மிக குருகிய காலத்தில் இந்த வாக்குச்சாவடி கூட்டத்தை நடத்தி இருக்கும் கே.என் நேரு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி.

 



 

இந்த கூட்டத்தில் 12,645 வாக்குச்சாவடிகளில் இருந்து ஒவ்வொருவர் வந்து இருக்கிறீர்கள் - உங்களை பற்றி முழுமையாக கேட்டேன்,சிலரை மாற்ற சொல்லி இருந்தேன். பல ஆய்வு கட்டத்திற்கு பிறகே வாக்குச்சாவடி அடையாள அட்டை உங்களுக்கு அளிக்கப்படுகிறது. நவீன தமிழகம் மற்றும் திராவிட மாடல் ஆட்சி அனைத்தையும் அறிந்து இருப்பீர்கள். கழகம் துவங்கி 75 ஆண்டுகள் ஆகிறது . நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர் நோக்கி இருக்கிறோம். கலைஞர் நூறாண்டு பிறந்த நாள் விழா,  கழகத்தின் 75 வது ஆண்டு விழாவில் நான் பொறுப்பாளர்கள்  அனைவருக்கும் வாழ்த்துகளை கூறி கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கும் நீங்கள் தான் காரணமாக இருக்கும்.  உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் நான் 40-ம் நமது என்று  நம்பிக்கை கூறி வருகிறேன்.


மேலும் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது தான் உங்களது முதல் பணி ,தினமும் வாக்காளர்களை சந்தித்து பரப்புரை செய்வது , நம் சாதனைகளை எடுத்து கூறுவது , வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வர வழைக்க வேண்டும். வாக்குச்சாவடியில், உங்களது வாக்காளர் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக நீங்கள் மாற வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் கொண்டுவரப்படும் கோரிக்கை கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன்.  எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவில் இந்த ஆட்சி நடந்து வருகிறது . எங்களுக்குள் குறை இருக்கலாம், ஆனால் ஆட்சியில் எந்த குறையும் இருக்காது.  முன்பு நான் பயணம் செல்ல போனால் ஆயிரக்கணக்கான மனுக்கள் தருவார்கள் இப்போது அது நூற்றுக்கணக்காக மாறி விட்டது ,இதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.




மேலும், பொய் சொல்பவர்கள்,  குறை கூறுபவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் . ஆனால் நீங்கள் நம் சாதனையை சொல்லுங்கள். சமக ஊடகம் தான் இன்று சிறப்பான தளமாக உள்ளது.  சமூக வளைதளங்களில் கணக்கு தொடங்குகள் , கண்டிப்பாக அதில் நலத்திட்டங்களை பேசுங்கள்.  காலம் மாறி இருக்கிறது, எல்லாம் வாட்ஸ் ஆப்பில் பேசுகிறார்கள்.


மேலும் தெரிந்தோ தெரியாமாமோ ஆளுநர் ஒருபக்கம் நமக்கு எதிராக பேசி வருகிறார்.  ஆளுநர் தேர்தல் வரை கூட இருக்கட்டும், நமக்கு இன்னும் வாக்குகள் அதிகரிக்கும். மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது ,தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். மாநிலங்களில் பல்வேறு மொழி,பல்வேறு கலாச்சாரத்தில் உள்ள அனைவருக்கும் எதிரான கட்சி தான் பா.ஜ.க  26 கட்சிகள் ஒன்று இணைந்தோம் ,  இந்தியாவை காப்பாற்ற போவது இந்த INDIA கூட்டணிதான். இது வாரிசுகளுக்கான கட்சிதான்,  ஆரியத்தை வீழ்த்த பெரியாரின் வாரிசுகள்,  அண்ணாவின் வாரிசுகள் ஆகும். குஜராத்தில் நடந்ததை தற்போது மணிப்பூர் நினைவிற்கு கொண்டு வருகிறது . மணிப்பூர் பா.ஜ.க சட்ட பேரவை உறுப்பினரே அழகாக கூறி இருக்கிறார். பா.ஜ.க காவல்துறைதுடன் சேர்ந்து மக்களை தாக்குகிறது என்று அவரே சொல்கிறார். மேலும், பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழலை பற்றி பிரதமர் பேசுகிறார், இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமையாம தோற்கடிக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதியின் போர்படை தளபதிகள் நீங்கள், உங்களை நம்பித்தான் நான் இந்த பொறுப்பை கொடுத்து இருக்கிறேன். இந்தியா வெல்லும் அதை 2024 சொல்லும்” என்றார்