திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மணிப்பூர் பிரச்சனை நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பவே அண்ணாமலை தற்போது தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் என்கிற பெயரில் ஆளுநரை சந்தித்து வழங்கியுள்ளார். Specific charge எதாவது அண்ணாமலை சொல்லி இருக்கிறாரா ? அப்படி எதுவும் இல்லை, அவர் என்ன புகார் கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. திசை திருப்புவதற்காக தான் அண்ணாமலை இது போன்ற புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். முகாந்திரம் இல்லாத அவர் புகாரை எப்படி ஏற்றுக்கொள்வது. எதையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயார். திமுகவினர் மீது போட்ட அனைத்து வழக்கையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறோம். ரூபாய் 2500 கோடிக்கு பினாமி அண்ணாமலை என்று நான் கூட சொல்லலாம். ஆனால் அதனை நாம் நிரூபிக்க வேண்டும்.
மேலும், மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே அண்ணாமலை இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார். ED ரைடே நியாயாமா இல்லையா என்று சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்படுகிறது ?. எனவே, நல்ல தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும். இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை என்பார்களே தவிர ? கண்டிப்பாக இதனால் திமுகவிற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது. அண்ணாமலை ஒரு empty vessel , காலி பாத்திரம்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்