திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் மாநில அளவில் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலுமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா தேவி (20) என்ற மாணவிகல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் - மேலும் அவளா சௌமியா தேவி தடகள வீராங்கனை என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் அவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற சக மாணவி ஒருவரும் தங்கி கல்வி பயின்று வருகிறார். நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியில் சென்றுள்ளார்  அவளாசௌமியா தேவி மட்டுமே விடுதி அறையில் இருந்துள்ளார். வெளியில் சென்றிருந்த தீட்சனா நேற்று இரவு  விடுதிக்கு திரும்பி வந்து அறையை பார்த்தபோது அறைகதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது கதவை தட்டியும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் திறக்காததால் கொஞ்சம் பலமாக ஓங்கி உதைத்துள்ளார். அப்போது கதவு திறந்துள்ளது. உள்ளே பார்த்த போது சீலீங்பேனில் பெட்சீட்டில் அவளா செளமியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து தீட்சனா அதிர்ச்சி அடைந்தார்.




இச்சம்பவம் குறித்து தீட்சனா உடனடியாக விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார் - அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் அவளா செளமியா தேவியின்  உடலை பார்வையிட்டதோடுகைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர் பின்னர் துவாக்குடி போலீசார் அவளா சௌமியா தேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


துவாக்குடி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவளா செளமியா தேவிக்கு ஐதராபாத்தில் படிக்கும் பொழுது ஒரு காதலன் இருந்தது தற்போதும் அந்த காதல் தொடர்ந்து வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த காதல் விவகாரம் இரு குடும்பத்திற்கும் தெரியும் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவளா சௌமியா தேவிக்கு அவரது காதலன் நேற்று போனில் பேசி உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சௌமியா தேவி தற்கொலைக்கான காரணம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் - இச்சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண