திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பி ஓடிய இலங்கை கைதி அதிரடியாக கைது

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து ஜன்னல் கம்பியை உடைத்து தப்பித்து சென்ற இலங்கை நாட்டை சேர்ந்த முகாம்வாசி அதிரடியாக கைது..

Continues below advertisement

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷ் , நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் இன்றி கள்ளத் தோனி மூலம் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி இருந்தது, மேலும், ஆயுத கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

Continues below advertisement

மத்திய சிறையில் இருக்கக்கூடிய சிறப்பு முகாமில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீண்ட நாள் சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் உடனடியாக எங்களை விடுவிக்க வேண்டும் எங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். அதே சமயம் சில நேரங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம், சிறை வளாக சுவற்றின் மீது ஏறி நூதன முறையில் போராட்டம் என தொடர்ந்து அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை நாட்டை சேர்ந்த சிலர் உடனடியாக எங்களை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இலங்கையைச் சேர்ந்த இவர் மீது சென்னை கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், சம்பவ இடத்தில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி விசாரணை மேற்கொண்டார். 

இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து இலங்கை கைதியை தீவிரமாக தேடி வந்தனர்.


சிறப்பு முகாமில் இருந்து தப்பித்து ஓடிய இலங்கை கைதி - அதிரடியாக கைது..

இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கூறிய தகவல்.. 

திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்புமுகாமில் தங்க வைக்கபட்டிருந்த இலங்கை நாட்டை சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் (எ) அப்துல் ரியாஸ் என்பவர்  தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் இருந்த சிறிய ஜன்னல் வழியாக ஜன்னலின் கம்பிகளை உடைத்து தப்பித்து சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் கே.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. 

மேலும் சிறப்பு முகாமிலிருந்து தப்பித்து சென்ற  முகாம் வாசியை கைது செய்ய தனிப்படை அமைக்கபட்டது. 

இந்நிலையில் தப்பித்து சென்ற அப்துல் ரியாஸ் கானை தேடி வந்த நிலையில், நேற்று இரவு தனது குடும்பாத்தரை கான ராமேஸ்வரம் செல்ல திருச்சி ரயில் நிலையம் அருகே ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார்  விரைந்து சென்று அங்கு இருந்த அப்துல் ரியாஸ் கான் கைது செய்யப்பட்டார். 

மேலும்  நீதித்துறை நடுவர்-1, திருச்சி அவர்கள் முன் ஆஜர்படுத்தி,  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola