• திருச்சி மாவட்டம் மணப்பாறை மோர்குளம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகராஜன், மகாலட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மகாகாளிபட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை பகுதி அலுவலகத்தில் கடந்த 30 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தராஜன் மற்றும் 2 புரோக்கர்களிடம் 60 ஆயிரம் கைப்பற்றப்பட்ட நிலையில், 40 பேரிடம் விசாரணை நடத்த திட்டம்

  • திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்புதூர் மணப்பாறை பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது

  • நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த போர்ப்படை தளபதிகளாக மாணவர்கள் மாறவேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துளார். இந்திய மாணவர் சங்கம் நடத்திய நீட் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  • கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 7 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் மாணவிகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க முயன்ற நிலையில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடினர்

  • மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தநிலையில், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை 

  • திருச்சி மாவட்டத்தில் சிந்தாமணி சத்திரம் பேருந்து நிலையம் மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 2.65 கோடி அரசு ஒதுக்கீடு

  • திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் நேற்று ஒரே நாளில் 65 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் மேலும் 1650 மருத்துவ இடங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.