தமிழகத்தில் கொரோனா 3 அலை மிக தீவிரமாக பரவி அதிகளவில் மக்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று இரட்டிப்பாக  பரவி வருகிறது. இதனால்  நோய் பரவலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நாள்ளொன்றுக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.


இதுவரை திருச்சியில் மட்டும் 83887 பேர் பாதிக்கபட்டுள்ளனர், இதில் 79337 பேர் குணமடைந்து உள்ளனர், மேலும் தொற்றால் பாதிக்கபட்டு  3440 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இதுவரை 1110 நபர்கள் இறந்துள்ளார்கள். ஆகையால் மேலும் கொரோனா பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம்  பொங்கல் பண்டிகை நிறைவடைந்து உள்ளதால் மாநகரில் கொரோனா தடுப்பு விதிகள் கண்காணிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக  திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். 




திருச்சி மாநகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. மாநகரில்  கட்டுபடுத்தபட்ட பகுதிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஆகையால் மாநகராட்சி சார்பாக மக்கள் அதிகளவில் கூட்டமாக இருக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2552 பேர் தங்களை வீட்டிலியே தனிமைபடுத்தி கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


தற்போது பொங்கல் விடுமுறை நிறைவடைந்து உள்ளதால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவிக்கையில் திருச்சி மாநகரில் தொற்று அதிகரித்தாலும் உயிரிழப்புகள் மிக குறைவாகவே உள்ளது. இதற்கு தடுப்பூசி முக்கிய காரணம் ஆகும் எனவே அனைவருக்கும் தடுப்புசியை செலுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் விதிமுறைகளை தடுக்க மாநகராட்சியில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.




மேலும் மாநகரில் கடந்த 15 நாட்களில் மட்டும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக  ரூபாய் 75 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் உள்ல 4 கோட்டங்களிலும்  விதி மீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். இக்குழுவினர் விதிமீறலுக்கு அபராதம் விதித்ததுடன் வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தடுப்புசி செலுத்தி உள்ளார்கலா என்பதை குறித்தும் ஆய்வு செய்வார்கள். மேலும்  இதில் மருத்துவ காரணம் இல்லாமல் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு உடனே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு விதித்துள்ள கட்டுபாடுகள், விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் பிறகு கடைக்கு சீல் வைக்கபடும்  என மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார். குறிப்பாக  பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும், விதிமுறைகளை மீறினால் சட்டரீதியான நடவடிகைகள் மேற்க்கொல்லபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.